Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செய்யாறில் நடுரோட்டில் ரகளை வாலிபர் கைது

செய்யாறு, மே 26: செய்யாறில் நடுரோட்டில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். செய்யாறு சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்ணியம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக நின்று, ரகளையில் ஈடுபட்டவரை அங்கிருந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர்.

ஆனால் அவர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் அவரை பிடித்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த முருகன்(35) என தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.