Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாலை ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றினர் தண்டராம்பட்டு பகுதியில் உள்ள

தண்டராம்பட்டு, ஜூன் 25: தண்டராம்பட்டு பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றினர்.தண்டராம்பட்டு- சாத்தனூர் சாலை, தானிப்பாடி சாலை ஆகிய சாலைகளில் இருபுறமும் இரு சக்கர வாகனங்கள், தள்ளு வண்டியில் காய்கறி மற்றும் பழ வண்டிகள், கடைக்காரர்கள் சாலை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார், சாலைகளின் இரு புறமும் ஆக்கிரமிப்பு செய்து, நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், தள்ளு வண்டி கடைகள் ஆகியவற்றை அகற்றினர்.