Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பெரணமல்லூர் அடுத்த கெங்காபுரத்தில் செய்யாற்று படுகையில் மணல் கொள்ளை பொதுமக்கள் டிராக்டரை துரத்திய வீடியோ வைரல்

பெரணமல்லூர். ஜூன் 25: பெரணமல்லூர் அருகே செய்யாற்று படுகையில் மணல் கொள்ளையடிக்க வந்த டிராக்டரை பொதுமக்கள் விரட்டி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பெரணமல்லூர் அடுத்த கெங்காபுரம், கொழப்பலூர், நாராயணமங்கலம், மேல்சாத்தமங்கலம், ஆவணியாபுரம், நரியம்பாடி, அன்மருதை, முனுகப்பட்டு பகுதி வழியே ஆற்றுப்படுகை செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வளம் கண்டு வருகின்றனர். குறிப்பாக கெங்காபுரம் பகுதியில் உள்ள கொள்ளை கும்பல் அந்த பகுதியில் அவ்வப்போது மணல் வளத்தை சுரண்டி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: இப்பகுதியில் பெரும்பாலான மக்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்து விவசாயம் மற்றும் கூலி வேலையில் ஈடுபட்டு வருகிறோம்.