Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குடிநீர் மோட்டார் பழுதால் தண்ணீரின்றி மாணவர்கள் பாதிப்பு; சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை

கலசப்பாக்கம், ஜூலை 24: கலசப்பாக்கம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் குடிநீர் மோட்டார் பழுதால் தண்ணீரின்றி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கலசப்பாக்கம் ஒன்றியம் மேலாரணி ஊராட்சி மேல்தாக்கல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் டேங்க் முலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மின் மோட்டார் பழதானது. இதனால், குடிநீர் சப்ளை செய்வது தடை பட்டதால், மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சமையல் செய்ய தண்ணீரின்றி வெளியே சென்று எடுத்து வர வேண்டி உள்ளது. கழிவறையில் தண்ணீர் இல்லாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.