Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாத்தாவிற்கு சொந்தமான மினி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பேத்தி பலி: தண்டராம்பட்டில் சோகம்

தண்டராம்பட்டு, மே 23: தாத்தாவிற்கு சொந்தமான மினி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பேத்தி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சங்கர். இவருக்கு சொந்தமான மினி பேருந்து உள்ளது. இவர்களது மகள் தேவி. இவரது கணவர் சக்திவேல். சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த தனது மாமனார் வீட்டிற்க்காக கணவன் மனைவி குழந்தைகளுடன் தண்டராம்பட்டியில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் பேத்தி சோபியாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தாத்தா சங்கருக்கு சொந்தமான மினி பேருந்தில் மகள் பேத்தியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று மீண்டும் வீட்டின் அருகே கொண்டு வந்து மகள் பேரக் குழந்தையை இறக்கி விட்டு தாத்தா சங்கர் பேருந்து எடுத்து கொண்டு கிளம்பும்போது பேரக் குழந்தை சோபியா, தாத்தா மினி பேருந்தின் அருகே ஓடிவரும்போது சக்கரத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து சக்திவேல் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.