Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கண்ணமங்கலம் அருகே பரபரப்பு; கோயில் இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு: பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

கண்ணமங்கலம், மே 23: புதுப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி மன்றத்திற்கு என புதிய அலுவலகக் கட்டிடம் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கான கட்டுமானப் பணிகள் ஓரிடத்தில் தொடங்கி, சுவர்கள் எழுப்பப்பட்டு மேல்தளம் அமைக்கும் நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் இடம் அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்குச் சொந்தமான இடம் எனவும், இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.

எனினும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த புதுப்பாளையம் கிராம மக்கள், நேற்று திரளாகப் புறப்பட்டு ஆரணி -வேலூர் பிரதான சாலைக்கு வந்தனர். அங்கு சாலையின் நடுவே உள்ள தார்ச்சாலையிலும், பாதசாரிகள் கடக்கும் கோட்டின் மீதும் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பொதுமக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால், முக்கிய வழித்தடமான ஆரணி -வேலூர் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கண்ணமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இதனைத் தொடர்ந்து மறியலை கைவிடப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. எனினும், அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாகச் சாலை மறியலில் ஈடுபட்டதாக, போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் மீது கண்ணமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.