Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீர்வரத்து அதிகரிப்பால் சாத்தனூர் அணை நீர்மட்டம் 7 அடி உயர்வு

தண்டராம்பட்டு, ஜூன் 22: சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் 18 நாளில் 7 அடியாக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக சாத்தனூர் அணை உள்ளது. இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. பருவ மழை காரணமாக அணை முழு கொள்ளளவு எட்டியது. விவசாய பாசனத்திற்காக திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மாவட்ட விவசாயிகள் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதனால் விவசாய பாசனத்திற்காக தொடர்ந்து 100 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் சாத்தனூர் அணை 78 அடியாக நீர்மட்டம் குறைந்தது. கிருஷ்ணகிரி கேஆர்எஸ் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வினாடிக்கு 660 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சாத்தனூர் அணை நேற்று 85.50அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த 18 நாளில் சாத்தனூர் அணை 7 அடியாக உயர்ந்துள்ளது.