Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முரம்பு மண் கடத்தலை தடுத்த அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்

செங்கம், ஜூன் 22: செங்கம் அருகே ஏரியில் முரம்பு மண் கடத்தலை தடுத்த அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது போலீசார் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீர் வளம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளராக பணிபுரிந்து வருபவர் ஹரிஹரன். பணி மேற்பார்வையாளராக பெருமாள் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் செங்கம் அடுத்த காயம்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் முரம்பு மண் கடத்துவதாக உதவி பொறியாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.