Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஆரணியில் தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஆரணி, மே 20: ஆரணி டவுன் ஷராப் பஜார் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் 101ம் ஆண்டு பிரமோற்சவம் தேர்திரு விழா நேற்று நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையொட்டி, தினமும் கில்லா வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனையுடன் சிம்மவாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனம், கருட சேவை, யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும், தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்விழா வரும் 25ம் தேதி வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

மேலும், விழாகொடி ஏற்றம் தொடங்கிய நேற்று முதல் அன்னவாகனம், வாகனத்தில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு ஆரணி டவுன் சத்திய மூர்த்தி சாலை, காந்திசாலை, பழைய, புதிய பஸ்நிலையம், கோட்டை வடக்கு மாடவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி திருவீதி உலா வந்து, பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.