Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சாதி சான்றிதழ் வழங்கக்கோரி குடுகுடுப்பை இனத்தை சேர்ந்த மக்கள் தாலுகா அலுவலக்தை முற்றுகையிட முயற்சி

ஆரணி, ஜூன் 19: ஆரணி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று நடந்தது. இதில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வேர் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் ஜமாபந்தியை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசராணை மேற்கொண்டார். அப்போது ஆரணி டவுன் பள்ளிகூட தெருவை சேர்ந்த குடுகுடுப்பை சமுகத்தை பொதுமக்கள் சாதி சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். தகவல் அறிந்து வந்த ஆரணி டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஜமாபந்தியில் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட வந்ததை கைவிட்டு மனு அளித்து சென்றனர்.