Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

4 கிராமங்களில் 5 மணிநேரம் மின்வெட்டு; மின்னல் தாக்கி டிரான்ஸ்பார்மர்கள் பழுது

வந்தவாசி, ஜூன் 19: வந்தவாசி தாலுகாவில் நேற்று காலை 7 முதல் 12 மணி வரை 4 கிராமங்களில் 5 மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டது. மேலும் மின்னல் தாக்கி டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்ததால் மின்வாரிய அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் சாலைகளில் நடக்க முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. கோடைக்கால வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல வீடுகளில் பேன், ஏசி, இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தற்போது தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.