Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செய்யாறு அருகே புளியமரம் வெட்டியதை தட்டிக்கேட்ட மாமியார், மருமகள் மீது கோடாரியால் தாக்குதல்: தம்பதி மீது வழக்கு

செய்யாறு, மே 19: செய்யாறு அருகே புளியமரம் வெட்டியதை தட்டிக்கேட்ட மாமியார், மருமகள் கோடாரியால் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புன்னை கிராமத்ைத சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவரது மனைவி ரேவதி(30). இவர்களது வீட்டு மனையில் புளியமரம் உள்ளது. இந்த மரத்தை அதே பகுதியை சேர்ந்த தங்கரூபன்(67), அவரது மனைவி சரோஜா ஆகியோர் கடந்த மாதம் 18ம்தேதி கோடாரியால் வெட்டியுள்ளனர்.

இதையறிந்த ரேவதியும் அவரது மாமியார் நவநீதமும் தட்டிக்கேட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தங்கரூபன், அவரது மனைவி சரோஜா ஆகிய இருவரும் சேர்ந்து ரேவதியையும், நவநீதத்தையும் கோடாரியால் தாக்கினார்களாம். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ரேவதி தூசி ேபாலீசில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் தங்கரூபன், அவரது மனைவி சரோஜா மீது சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.