செங்கம், ஆக.18: செங்கம் அருகே நடத்திய வாகன தணிக்கையில் காரில் கடத்திச்சென்ற 450 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தப்பிய நபரை தேடிவருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் டோல்கேட் வழியாக குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் வாகனத்தில் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தீவிர வாகன தணிக்கை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தினர். ஆனால் அதற்குள் காரில் இருந்த நபர், திடீரென இறங்கி அங்குள்ள வயல்வெளி வழியாக தப்பியோடினார்.
+
Advertisement



