Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

படவேடு கோயில் அருகே போலீஸ்காரரை சரமாரி தாக்கிய 2பேர் கைது

ஆரணி, ஆக.18:படவேடு கோயில் அருகே போலீஸ்காரரை சரமாரி தாக்கியதாக ஆற்காட்டை ேசர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் ரமேஷ்(45), அவரது உறவினர் குமரகுரு(33). இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் தங்களது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் கோயிலுக்கு லோடு ஆட்டோவில் வந்தனர். அப்போது அருகே பாதுகாப்பு பணியில் இருந்த சந்தவாசல் போலீஸ்காரர் யுவராஜ் என்பவர், ரமேஷ் குடும்பத்தினர் வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி, அருகே உள்ள வாகன நிறுத்தும் இடத்திற்கு செல்லும்படி கூறியுள்ளார்.

அதற்கு ரமேஷ், ‘லோடு ஆட்டோவில் வயதானவர்கள் உள்ளனர், அனைவரும் கோயிலுக்கு நீண்டதூரம் நடந்து செல்ல முடியாது. எனவே லோடு ஆட்டோவில் தான் கோயிலுக்கு அழைத்துச்செல்வோம்’ எனக்கூறியுள்ளார். இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.