செய்யாறு, ஆக.18: செய்யாறு அருகே கல்குவாரியில் இருந்து அதிகளவு ஜல்லி ஏற்றி வந்த 7 லாரிகளை, பொதுமக்கள் சிறைபிடித்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் தாலுகாக்களில் 70க்கும் மேற்பட்ட கல்குவாரிகளும் கிரஷ்சர்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் அரசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் பாரங்களை ஏற்றிச்செல்வதுடன், அரசு குறிப்பிட்ட நேரத்தை பின்பற்றாமல் லோடு ஏற்றி செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் செய்யாறு அடுத்த நெடும்பிரை கிராமத்தில் நேற்று அதிக பாரம் ஏற்றி வந்த 7 லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். தகவலறிந்து வந்த விஏஓ சந்தியா கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த மோரணம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
+
Advertisement



