Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செய்யாறு அருகே நடந்த தனித்தனி விபத்தில் 2 மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயம்

செய்யாறு, ஜூன் 18: செய்யாறு அருகே நடந்த தனித்தனி விபத்தில் 2 மாணவர்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். செய்யாறு கொட நகரை சேர்ந்தவர் முனிசாமி(42), தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மகன்கள் பிரசாந்த்(16), ஹேமதாஸ்(14). இருவரும் செய்யாறு அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதியம் பிரசாந்த், ஹேமதாஸ் இருவரும் செய்யாறு- வந்தவாசி சாலையில் பைக்கில் சென்றனர். விநாயகபுரம் கூட்ரோட்டில் சென்றபோது, வந்தவாசி நோக்கி சென்ற பைக், இவர்களது பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பிரசாந்த், ஹேமதாஸ் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு ேவலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.