Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு யார் அவர்? போலீஸ் விசாரணை

வந்தவாசி, மே 18: வந்தவாசி அடுத்த ஓசூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை அருகே சங்கர் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் நேற்று கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சடலமாக மிதந்தவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.