Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாமனாரை சரமாரியாக கத்தியால் குத்திய மருமகன்: மகள் கண் எதிரே கொடூரம்: குடும்பத்தகராறில் ஆத்திரம்

திருவண்ணாமலை, ஆக.17: திருவண்ணாமலை அருகே குடும்ப தகராறில் மாமனாரை சரமாரியாக கத்தியால் வெட்டிய மருமகனை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த வாழ்விடாந்தாங்கல் மதுரா மேல்சாத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் (60). விவசாயி. இவரது மருமகன் முருகன் (36). ஊசாம்பாடி கிராமத்தில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், முருகன் தனது மனைவி தேவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கமாம். அதன் கரணமாக, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், மனைவியை அழைத்து வந்து விடுமாறு முருகன் தொடர்ந்து போனில் தனது மாமனாருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.