Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தூங்கிய பெண்ணிடம் 5 சவரன் தாலிச்சரடு பறிப்பு

திருவண்ணாமலை, ஆக.17: திருவண்ணாமலை அடுத்த துர்க்கை நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (40), விவசாயி. இவரது மனைவி வேண்டா (36). விவசாய நிலத்துக்கு அருகே இவர்களது வீடு அமைந்துள்ளது. அருகில் வேறு எந்த குடியிருப்புகளும் இல்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில், வீட்டு வராண்டாவில் கயிறு கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த வேண்டாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கதாலி சரடை, மர்ம நபர் இழுப்பதை அறிந்து விழித்துக்கொண்ட வேண்டா, அலறி கூச்சலிட்டுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த அவரது கணவர் வெளியே ஓடிவந்துள்ளார். ஆனாலும், கண்ணிமைக்கும் நேரத்தில் தாலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து மர்மநபர் தப்பி ஓட்டம் பிடித்தார். இதுதொடர்பாக, திருவண்ணாமலை தாலுகா போலீசில் வேண்டா கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய மர்மநபரை தேடிவருகின்றனர்.