Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தினமும் 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கிறது; கோடை கடந்தும் வாட்டி வதைக்கும் வெயில்: வெக்கையில் தவிக்கும் பொதுமக்கள்

செய்யாறு ஜூலை 16: கோடை வெயில் கடந்தும் இன்று வரை வாட்டி வதைக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி படுவதோடு வெக்கையில் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழையும் போய்த்துள்ளதால் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட முடியவில்லை. தினமும் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கும் ஆறு மாத காலம் உத்தராயணம் காலமாகும். அதாவது தமிழ் மாதங்களான தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உள்ள இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். குறிப்பாக கோடை வெயில் எனப்படுகின்ற ஏப்ரல் மே மாதங்களில் உச்சமாகவும், அப்போது அக்னி வெயில் தாக்கமும் அதிகமாக இருக்கும்.

அந்த வேளைகளில் சில பருவ மாற்றங்களால் கோடையில் மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைக்கும். ஆனால் இந்த ஆண்டு கோடைமழை பொய்த்த நிலையில் வெயிலின் ஆதிக்கம் தரிகட்டுள்ளது. இதனால் வெப்பம் தாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஏறுவெயில் எனப்படுகின்ற 11 மணி முதல் 3 மணி வரையில் இருப்பதை காட்டிலும் இறங்குவெயிலின் தாக்கம் 3 மணி முதல்6 மணி வரையில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. சாலையிலும் பொது மக்களின் நடமாட்டம் மிக மிக குறைந்த காணப்படுகிறது. குழந்தைகளும் வயதானவர்களும் வெயிலில் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை 7 மணிக்கே வெயில் சுளீர் என வருகிறது. தினமும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. கோடை வெயிலை விட தற்போது வீசும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இரவு நேரங்களில் புழுக்கம் அதிகளவில் உள்ளதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். சுட்டெரித்து வரும் வெயிலால் உடலில் இருக்கும் நீர்ச்சத்தையும் வெயில் உறிஞ்சுகிறது. இதனால் சோர்வாக இருக்கும் ேநரத்தில் ஓஆர்எஸ் கரைசல் குடிக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

எல்நினோ காலத்தால் வறட்சி

எல் லினோ: தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதற்கு காரணமாக இருப்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிக வெப்பமடையும் போது ஏற்படும் ஒரு தற்காலிக இயற்கை காலநிலை மாற்றமாகும். இந்த மாற்றத்தால் காற்று வீசும் திசை மாறி, உலகெங்கும் உள்ள மழைச் சுழற்சி மற்றும் வெப்பநிலை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக தீவிரமடைந்து, ஒவ்வொரு 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. இந்தியாவிலும் தமிழகத்திலும் ஏற்படும் தாக்கம் பருவமழை பாதிப்பு எல்நினோ காலத்தில் இந்தியாவில் காற்றின் அழுத்தம் பாதிக்கப்பட்டு, தென்மேற்கு பருவமழை பலவீனமடைகிறது. இது வழக்கமான மழைப்பொழிவைக் குறைத்து நாட்டின் சில பகுதிகளில் வறட்சியை ஏற்படுத்துகிறது.

வெப்பநிலை உயர்வு

மேகமூட்டம் குறைந்து சூரியக் கதிர்வீச்சு அதிகரிப்பதால் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இதனால் கடுமையான வெப்ப அலைகள் வீச வாய்ப்புள்ளது. தமிழ்நாடு: எல்நினோ நிகழ்வுகளின்போது தமிழகத்தின் சில குறிப்பிட்ட மாவட்டங்கள் குறைவான மழை மற்றும் வறட்சி பாதிப்புக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ளது.