Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வந்தவாசி அருகே போலீசாரிடம் தகராறு: தொழிலாளி கைது

வந்தவாசி, ஜூலை 16: வந்தவாசி அடுத்த தேசூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, பிச்சை வேலு, ஏட்டு விஜயன் ஆகியோர் நேற்று முன்தினம் திரக்கோயில் பாணம்பட்டு கூட்டுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக நடந்து வந்த போதை ஆசாமி போலீசாரிடம் வீண் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போலீசாரை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிவு நேற்று அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் பருவதம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெமினி(48) என தெரிய வந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.