Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம்: எலக்ட்ரிசியன் போக்சோவில் கைது

தண்டராம்பட்டு, ஜூலை 13: தண்டராம்பட்டு அருகே பள்ளிக்குசென்ற பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம் செய்த எலக்ட்ரீஷியன் போக்சோவில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன்(27) எலக்ட்ரீஷியன். கடந்த 10ம் தேதி பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி பள்ளிக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சைக்கிளை தடுத்து நிறுத்திய பார்த்திபன் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி திரும்பி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தார். தொடர்ந்து மாணவியை அழைத்துக் கொண்டு தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அம்சவல்லி வழக்குப்பதிவு செய்து எலக்ட்ரீஷியனை போக்சோவில் நேற்று கைது செய்து தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.