Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அண்ணாமலையார் கோயிலில் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி: சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

திருவண்ணாமலை. ஜூன் 11: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செயல்படும் அர்ச்சகர் மற்றும் ஏதுவர் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்திருப்பதாவது:அண்ணாமலையார் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் 2026-2027ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அதில், இளம் அர்ச்சகர் சான்றிதழ் ஓராண்டு பயிற்சியும், ஓதுவார் பயிற்சி மூன்றாண்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்து மதத்தை பின்பற்றுகிற, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சி பள்ளியில் சேரலாம். அர்ச்சகர் பயிற்சி மற்றும் ஓதுவார் பயிற்சியில் சேர 14 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு ரூ 10 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். பகுதி நேர மாணவர்களுக்கு ஊக்குத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி அனைத்தும் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.