Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஏஐ கூலிங் கிளாஸ் மூலம் படம் பிடித்த 2 வாலிபர்கள் ஜாமீனில் விடுவிப்பு; அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, ஆக.10:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஏஐ கேமரா பொருத்திய கண் கண்ணாடி அணிந்து கருவறையை படம் பிடித்த இரண்டு வாலிபர்களை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று முன்தினம், ஏஐ தொழில்நுட்ப நவீன கேமரா பொருத்தப்பட்ட கண் கண்ணாடி அணிந்து வந்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள், கருவறையை படம் பிடித்தபோது கோயில் ஊழியர்களிடம் சிக்கினர். உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின்போது, இச்சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்ட்டது. எனவே, வாலிபர்கள் புவனிஷ்(23), மகேஷ்(24) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.