Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம்; ஆடிப்பூரம் 5ம் நாள் விழாவில் சுவாமி வீதியுலா

திருவண்ணாமலை, ஆக.10: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வார இறுதி விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனால், 4 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் திகழ்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். சமீப காலமாக, பவுர்ணமி கிரிவலம் போல வார இறுதி நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், உள்துறை அமித்ஷா வருகை காரணமாக நேற்று முன்தினம் வெளியூர் பக்தர்களின் வருகை சற்று குறைந்திருந்தது.

அதைத்தொடர்ந்து, நேற்று வழக்கம் போல கூட்டம் அதிகரித்தது. அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கும் போதே, பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் திரண்டிருந்தது. அதனால், சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக வரிசையில் காத்திருந்த பிறகு தரிசனம் செய்ய முடிந்தது. எனவே, முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் பெரிதும் தவிப்படைந்தனர். கட்டண தரிசன வரிசை அனுமதிக்கப்படும் அம்மணி அம்மன் கோபுரம் அருகே காத்திருப்பு கூடங்கள் நிரம்பியதால், கோபுரத்துக்கு வெளியிலும் பக்தர்கள் காத்திருந்தனர்.