Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அமைச்சராக முடியவில்லையே என்ற வயிற்றெரிச்சலில் எஸ்பி வேலுமணி பொய் குற்றச்சாட்டு அதிமுக சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி

திருவண்ணாமலை, ஆக.10 தவெக அரசில் அமைச்சராக முடியவில்லையே என்ற வயிற்றெரிச்சலில், எடப்பாடி மீது பொய் குற்றச்சாட்டுகளை எஸ்பி.வேலுமணி போன்றோர் சுமத்துவதாக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். திருவண்ணாமலையில் நேற்று அதிமுக சட்டமன்ற கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை கேட்டுத்தான் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்தார். மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் அந்தந்த பகுதிகளில் குறுநில மன்னர்களாக செயல்பட்டதால், அவர்கள் பரிந்துரைத்த வேட்பாளர்களைத்தான் இந்த தேர்தலில் நிறுத்தினார்.

கோவை மாவட்ட பகுதிகளில் எஸ்பி வேலுமணி பரிந்துரைத்த 21 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கேபி அன்பழகன் போன்றோர் பரிந்துரைத்த வேட்பாளர்கள் தான் அந்தந்த மாவட்டங்களில் நிறுத்தப்பட்டனர். எனவே, தோல்விக்கு அவர்கள் தான் காரணம்.