Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்திலிருந்து சோதனை முயற்சியாக வரும் 13ம் தேதி முதல் அனைத்து புறநகர் பஸ்களும் இயக்கப்படும்: முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

திருவண்ணாமலை, ஜூலை 10: திருவண்ணாமலை கலைஞர் நூற்றாண்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து புறநகர் பேருந்துகளும் வரும் 13ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. அதையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் கடந்த ஜனவரி முதல் செயல்பட்டு வருகிறது. புதிய பேருந்து நிலையத்தில் கூடுதல் பேருந்துகள் நிறுத்துமிடத்திற்கான பணிகள் நடைபெற்று வந்ததால், புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, திருச்சி, மதுரை, நாகர்கோவில், கும்பகோணம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் புறநகர் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.