Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராணுவத்தை பாராட்டி வெற்றிப்பேரணி ஆரணியில் நடந்தது சிந்தூர் ஆபரேஷன்

ஆரணி, மே 7: சிந்தூர் ஆபரேஷன் முதலாமாண்டு நிகழ்ச்சியாக ராணுவத்தை பாராட்டி ஆரணியில் வெற்றி பேரணி நடைபெற்றது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை தகர்ப்பதற்காக இந்திய ராணுவத்ததால் கடந்த 2025ம் ஆண்டு மே 7ம் தேதி சிந்தூர் ஆபரேஷன் தொடங்கப்பட்டு பயங்கரவாதிகளின் முகாம்கள் ெவற்றிகரமாக அழிக்கப்பட்டது. இந்த வெற்றியின் முதலாம் ஆண்டை முன்னிட்டு ஆரணியில் விவசாயிகள் சங்கத்தினர், முன்னாள் மற்றும் இன்னாள் ராணுவ வீரர்கள், வியாபாரிகள் சங்கம் சார்பில் இந்திய ராணுவத்தை பாராட்டி முதலாம் வெற்றி பேரணி மற்றும் ஆரணி கோட்டை மைதானம் அருகில் உள்ள கார்கில் நினைவுத்தூண் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தாமோதரன், மாவட்ட செயலாளர் குணாநிதி, முன்னாள் ராணுவ வீரர்கள், வியாபாரிகள் சங்கத்தினர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் மூர்த்தி தலைமையில் வியாபாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் அமைப்பினர் தேசிய கொடியை கையில் ஏந்தி வெற்றி பேரணி ஆரணி டவுன் அண்ணா சிலையில் இருந்து காந்தி சாலை, புதிய, பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியகாக வந்து ஆரணி கோட்டை மைதானம் வரை பேரணியாக வந்து கார்கில் நினைவுத் தூண் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், விவசாயிகள், வணிகர்கள், வியாபாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.