Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி முதுநிலை பேராசிரியர் பணியிட மாற்றம் நர்சிங் மாணவி பாலியல் புகார் எதிரொலி

திருவண்ணாமலை, நவ. 5: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை பேராசிரியர், பாலியல் சீண்டல் புகார் எதிரொலியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் (லேப் டெக்னீஷியன்) பயிற்சி மாணவி, அங்கு பணிபுரியும் முதுநிலை மருத்துவர் சோஜி என்பவர், தொடர்ந்து தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், அவதூறாக பேசுவதாகவும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

மேலும், இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். அதன்பேரில், திருவண்ணாமலை டவுன் மகளிர் போலீசார் நேற்று முன்தினம் மருத்துவக்கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, சம்மந்தப்பட்ட முதுநிலை பேராசிரியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. இந்நிலையில், இந்த விசாரணையின் அடிப்படையில், முதல் நிலை மருத்துவர் சோஜி என்பவரை, மதுரை அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புகார் தொடர்பாக துரை சார்ந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.