ஆரணி, நவ. 5: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கேளூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவரது மகன் சுகுமார்(35), கம்பி கட்டும் தொழிலாளி. திருமணமாகவில்லை. மேலும், கடந்த 2ம் தேதி இரவு அனைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த கனகா(21), என்பவரை சுகுமார் அவரது பைக்கில் அழைத்துக் கொண்டு ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் கூட்ரோட்டில் ஓட்டலில் சிக்கன் ரைஸ் வாங்குவதற்காக வந்துள்ளனர்.
பின்னர், ரைஸ் வாங்கி கொண்டு, மீண்டும் கேளூருக்கு செல்வதற்காக சுகுமார் பைக்கில் பின்னால் கனகா அமர்ந்து கொண்டு சென்றுள்ளார். அப்போது, ஆரணி- போளூர் செல்லும் சாலை, வடமாதிமங்கலம் கூட்ரோடு அருகேயுள்ள சென்றபோது போளூரில் இருந்து ஆரணி நோக்கி வந்த கார் சுகமார் பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், படுகாமடைந்த சுகுமார், கனகா மற்றும் கார் ஓட்டி வந்த மதன்ராஜ்(28), ஆகிய மூன்று பேரையும் அவ்வழியாக வந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், மேல்சிகிச்சைக்காக சுகுமார், கனகாவை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை சுகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, சுகுமாரின் அண்ணன் சுமன்(39), களம்பூர் போலீசில் நேற்று கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


