Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது எப்பது? தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம்

ஆரணி, ஜூன் 4: ஆரணியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தென்மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இடிமின்னல், மழை வெள்ளத்தில் சிக்கிக் கொள்பவர்களை மீட்பது குறித்து ஆரணி டவுன் சூரிய குளத்தில் தீயணைப்பு துறையினரின் போலி ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிலைய அலுவலர் ஏழுமலை தலைமை தாங்கி வீரர்களின் போலி ஒத்திகை பயிற்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மழை மற்றும் புயல், வெள்ளம் அவசர காலங்களில் எதிர்பாராத விதமாக நீர்நிலைகளில் ஆபத்தான இடங்களில் சிக்கி கொள்பவர்களை மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது, தன்னைதனே காப்பாற்றிக் கொள்ளுதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வீரர்கள் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து, நிலைய அலுவலர் ஏழுமலை கூறுகையில், ஆரணி தீயணைப்பு நிலையத்தில் வரும் 6, 7 ஆகிய தேதிகளில் வாங்க கற்றுக்கொள்வோம் தீ பாதுகாப்பு அறிவோம், உயிர்களை காப்போம் நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்’ என கூறினார்.