Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சேத்துப்பட்டு அருகே திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 பேர் மீது

சேத்துப்பட்டு, ஜூலை 3: சேத்துப்பட்டு அருகே திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஒதலவாடி கிராமத்தை சேர்ந்தவர் நேமிநாதன் மகன் அருகதாஸ்(53). இவர் திமுக கிளை செயலாளராக உள்ளார். கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ் மகன் மணிகண்டன் மற்றும் ஏழுமலை மகன் விஜயபாஸ்கர் ஆகியோர் அருகதாஸ் வீட்டிற்கு சென்று அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் வீட்டில் இல்லாததால், பின்னர் வாக்குச்சாவடி மையம் அருகே நின்றிருந்த அருகதாஸை நேரில் சந்தித்து மீண்டும் அவதூறாக பேசியதுடன், ‘உன்னை வெட்டிக் குத்திவிடுவேன்’ என்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருகதாஸ் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் லதா நேற்றுமுன்தினம் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன்(35) மற்றும் விஜயபாஸ்கர்(32) ஆகிய இருவரையும் தேடி வருகிறார்.