Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணிலா மூட்டைகள் பில் வழங்காமல் விற்பனை; வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை: தண்டராம்பட்டில் பரபரப்பு

தண்டராம்பட்டு, ஜூலை 2: மணிலா மூட்டைகள் சான்றுகள் இன்றி விற்பனை செய்வதால் விவசாயிகள் வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டராம்பட்டு வேளாண்மை அலுவலகத்தில் நேற்று திடீரென விவசாயிகள் முற்றுகையிட்டனர். அப்போது வேளாண் விதை விதை விற்பனையாளர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் விவசாயிகள் கூறியதாவது: வேளாண்மை விரிவாக்க மையத்தில் 35 கிலோ எடை கொண்ட ஒரு மணிலா மூட்டை ரூ.2100 விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் கொடுக்கும் பணத்திற்கு பில் தருவது இல்லை. மணிலா மூட்டையில் வேளாண்துறை அலுவலர்கள் கையொப்பம் எதுவும் இல்லாமல் வெறும் முட்டையாக விற்பனை செய்கின்றனர்.

தகுதியான விவசாயிகளுக்கு மணிலா வழங்குவது இல்லை. நிலம் இல்லாத வரும் இடைத்தரகர்களுக்கு 2000 ரூபாய்க்கு மணிலா மூட்டை எந்தவித சான்றுகளும் வாங்காமல் கொடுக்கின்றனர். உதவி வேளாண் அலுவலர்கள் தங்களுடைய உறவினர்களுக்கு மணிலா மூட்டைகளை அவர் பேரில் வாங்கியதாக தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். இதனை வேளாண்துறை அலுவலர்கள் தனியார் கடைகளில் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்பிறகு அனைவரையும் கலைந்துசென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.