Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நண்பனை வெட்டி கொல்ல முயன்ற தொழிலாளி உட்பட 5 பேர் கைது: கத்தி, பைக், 5 செல்போன்கள் பறிமுதல்

தண்டராம்பட்டு, ஆக.1: திருவண்ணாமலை அருகே உள்ள ஆனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கர்(32) கூலி தொழிலாளி. திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிவசங்கர் திருவண்ணாமலையில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ்சில் சென்றுகொண்டிருந்தார். தண்டராம்பட்டு அடுத்த கொலமஞ்சனூர் ஆற்றங்கரையோரம் உள்ள புற்றுக்கோயிலுக்கு செல்ல டிரைவர் பஸ்ஸை நிறுத்தினாராம். அப்போது, பஸ்சுக்குள் இருந்த 2 மர்ம நபர்கள் திடீரென சிவசங்கரை சரமாரியாக வெட்டினர். மேலும், பைக்கில் பின்தொடர்ந்து வந்த 3 பேரும் பஸ்சில் ஏறி சிவசங்கரை வெட்டி விட்டு, 2 பைக்கில் 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.