Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செய்யாறு அருகே தெருவில் விளையாடிய சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் சீண்டல்: ஐடிஐ மாணவன் போக்சோவில் கைது

செய்யாறு, ஜூலை 1: தெருவில் விளையாடிய சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐடிஐ மாணவனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி கடந்த 26ம் தேதி வீட்டின் அருகே விளையாடினார். அப்போது அங்கு தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்த, செஞ்சி தாலுகா வளத்தி அடுத்த கண்ணலம் கிராமத்தை சேர்ந்த 17 வயது ஐடிஐ மாணவன், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டபடி வீட்டிற்குள் சென்று பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்து சிறுமியின் தாய் செய்யாறு மகளிர் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் ெசய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை கைது செய்து, கடலூர் சீர்திருத்த சிறையில் அடைத்தனர்.