Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

திருவள்ளூர், செப்.30: உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை 2027ம் பருவத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான தகுதித்தேர்விற்கான அறிவிப்பு https://exams.nta.nic.in/RIMCEE/ மற்றும் http://rimc.edu.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் https://exams.nta.nic.in/RIMCEE/ மற்றும் http://rimc.edu.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவு கடந்த 1.9.2026 முதல் தொடங்கி 30ம் தேதி இன்று முடிவடையும். தாமதக் கட்டணம் ரூ.500 உடன் 1.10.2026 முதல் 7.10.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

எனவே, 2027ம் ஆண்டிற்கான உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான தகுதித்தேர்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை என்னென்னவென்று முறையாக அறிந்து அதற்கேற்றார் போல் மேற்படி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ச.கவிதா தெரிவித்துள்ளார்.