எண்ணூர், செப்.30: எண்ணூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூர் காசி கோயில் குப்பம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் அன்பானந்தம் (48). மீனவரான இவர், நேற்று முன்தினம் மீன்பிடி தொழிலுக்கு சென்று விட்டு, மதுபோதையில் வீட்டிற்கு வந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற 8 வயது சிறுமியிடம் செல்போனை காட்டி வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் மற்றும் உறவினர்கள் அன்பானந்தத்தை சரமாரியாக தாக்கினர். மேலும், எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். இதனால் பயந்து போன அன்பானந்தம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த எண்ணூர் காவல் நிலைய போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


