Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கஞ்சா கடத்திய வழக்கில் வாலிபருக்கு சிறைதண்டனை

பொன்னேரி, செப்.26: செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி, அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலையம் சாலை சந்திப்பு பாரத் பெட்ரோல் பங்க் அருகே 1.300 கிலோ கிராம் கஞ்சாவை இருசக்கர வாகனத்தில் விற்பனைக்கு எடுத்து வந்த மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த தமிழரசன்(33) என்பவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து வழக்கின் மீதான புலன் விசாரணை முடிக்கப்பட்டு இறுதி அறிக்கை சென்னை, போதைப்பொருள் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான 2வது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தமிழரசன் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்ட நிலையில் நேற்று வழக்கின்படி 18 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும். அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தொகையைச் செலுத்தத் தவறினால், கூடுதலான 2 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழரசனை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.