Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு அனுமதியின்றி வண்டல் மண் எடுத்த பொக்லைன், 4 டிராக்டர்கள் பறிமுதல்

பள்ளிப்பட்டு, செப்.26: பள்ளிப்பட்டு அருகே அனுமதி மீறி வண்டல் மண் எடுத்த பொக்லைன் மற்றும் 4 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரிப்பேட்டையில் கோண சமுத்திரம் செல்லும் சாலையில் உள்ள ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான சித்தேரியில் வட்டாட்சியர் அனுமதியுடன் விளை நிலங்கள் சமன்படுத்த இலவசமாக வண்டல் மண் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவில் வண்டல் மண் எடுக்கப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கொடிவலசா கிராம நிர்வாக அலுவலர் பாரதி நேற்று முன்தினம் சித்தேரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவில் ஆழம் எடுத்து வண்டல் மண் எடுத்தது தெரிய வந்தது. இதை அடுத்து ஏரிகள் மண் எடுத்துக் கொண்டிருந்த பொக்லைன் மற்றும் 4 டிராக்டர்கள் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.