Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பிளஸ் 2 மாணவியிடம் பேசியவருக்கு அடி உதை: பெண் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

திருத்தணி, செப். 25: பிளஸ் 2 மாணவியிடம் பேசியவரை தாக்கிய பெண் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் திருத்தணி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தாழவேடு கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு என்ற வாலிபருடன் பழகி வருவதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த இம்மானுவேல் (17), அதே பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் (31), சுசீல் (25), ரோஸி (25) ஆகியோருடன் நேற்று முன்தினம் விஷ்ணுவை பேச வேண்டும் என்று பெரியார் நகர் கல்குவாரி பகுதிக்கு அழைத்துச் சென்று அடித்து உதைத்துள்ளனர். மேலும், பிளஸ் 2 மாணவியிடம் பேசக்கூடாது என்று மிரட்டி அனுப்பியதாக தெரிகிறது.

மேலும் அன்று மாலை டியூசனுக்கு சென்று இருந்த பிளஸ் 2 மாணவியை பார்த்து ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக திருத்தணி பெரியார் நகர் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரின் மனைவி துர்கா புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரன்ஸ், இம்மானுவேல், சுசீல், ரோஸி ஆகியோரை தேடி வருகின்றனர்.