திருவள்ளூர், செப்.25: திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், கடந்த செப்.9ம் தேதி தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலுவையில் உள்ள சிலம்பம் போட்டியானது, வரும் 27ம் தேதி காலை 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் ச.கவிதா தெரிவித்துள்ளார்.
+
Advertisement


