திருத்தணி, செப்.25: ஆர்.கே.பேட்டை காவல் நிலையம் அருகே போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்.கே.பேட்டை நோக்கி சென்ற டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், கிராவல் மண் அனுமதியின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பீமாரெட்டியூர் மலைப்பகுதியில் இருந்து பொக்லைன் மூலம் மண் டிப்பர் லாரியில் நிரப்பி எடுத்து வந்து விற்பனை செய்யப்படுவதாக டிப்பர் லாரி டிரைவர் தெரிவித்தார்.
மேலும், உரிய அனுமதியின்றி மலையில் இருந்து கிராவல் மண் விற்பனைக்கு எடுத்துச் சென்ற டிப்பர் லாரியை பறிமுதல் செய்து சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சந்தோஷ் குமார் (26) என்பவரை கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி மலையில் இருந்து கிராவல் மண் எடுத்த தலைமறைவான பொக்லைன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


