Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் மனு

திருவள்ளூர், மே 25: தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இராஜ்மோகனை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்த வேண்டும், காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும்,

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து ஒன்றிய அரசுக்கு இணையாக வழங்கிட வேண்டும், அரசாணை 243 ரத்து செய்யதிட வேண்டும், டெட் தேர்வு நிலைபாடு குறித்தும், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நிலை குறித்தும், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், ரூ.5400 நிலுவை தொகை பிடித்தத்தை வழங்கிட வேண்டும், பி.லிட் குறையை நிவர்த்தி செய்யதிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.