Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ய முயற்சி: வாலிபர் சிறையிலடைப்பு

திருவள்ளூர், மே 25: திருவள்ளூர் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பம் ஆக்கியதோடு கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த மாணவி திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். தற்போது தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் இவர், படிக்கும்போது அதே பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்த தீனா என்பவருடன் பழகி உள்ளார். அந்த பழக்கம் காதலாக மாறியது.

இதனையடுத்து தீனா திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதால் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமாக உள்ள நிலையில் திருமணம் செய்ய கேட்டதற்கு தீனா மறுத்துள்ளார். மேலும் கருவை கலைக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தீனாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.