Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழவேற்காட்டில் கடல் ஆமைகள் தின விழிப்புணர்வு பேரணி

பொன்னேரி, மே 25: பொன்னேரி அருகே, பழவேற்காட்டில் நேற்று காலை உலக கடல் ஆமை தினத்தை முன்னிட்டு, பல்வேறு வகையான கடல் ஆமைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில், ஏராளமான கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்று, பழவேற்காடு பஜாரில் இருந்து மீன் மார்க்கெட் வரை ஊர்வலமாக சென்று, அப்பகுதி மக்களிடம் கடல் ஆமைகளின் பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியில் வனசரக அலுவலர் பிரபாகரன், வனவர் செந்தில்முருகன், மீன்வள கல்லூரி பேராசிரியர் சுருளிவேல்ராஜன், மீன்வள கல்லூரி மாணவர்கள், பழவேற்காடு மீனவர்கள் உள்பட பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.