Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

மாதவரம், அக்.22: மாதவரத்தில் ஏடிஎம் உதிரி பாகங்கங்கள் வைத்திருக்கும் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாதவரம் ஜிஎன்டி சாலையில் தனியாருக்கு சொந்தமான ஏடிஎம் உதிரி பாகங்கள் வைத்திருக்கும் குடோன் உள்ளது. இங்கு 20க்கு மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடோனில் திடீரென்று தீப்பற்றியது.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணன், நிலைய அலுவலர் முத்து வீரப்பன் தலைமையில் நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து மாதவரம் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.