Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ரூ.12 கோடி தங்கத்துடன் வியாபாரி மாயம்: போலீசார் விசாரணை

மாதவரம், அக்.22: சென்னை பட்டாளம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஜல்பா(42). இவரது கணவர் நிமித் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் தங்க வியாபாரம் செய்து வருகிறார். மேலும், சவுகார்பேட்டையிலும் சிறிய நிறுவனம் நடத்தி தங்க வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு வியாபாரத்திற்காக ரூ.12 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கத்துடன் ஈரோடு ரயில் மூலமாக ஈரோடு சென்றார். அதன் பிறகு நிமித், வீட்டிற்கு போன் செய்யவில்லை. இதுகுறித்து நிமித்தின் மனைவி ஜல்பா நேற்று புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நிமித்தின் செல்போன் எண்ணின் டவர் லோகேஷை கண்காணித்தபோது ஈரோட்டில் இறங்கியதும், செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.