Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வயதான தம்பதி வீட்டில் திருட்டு

திருமிழசை, ஆக.21:உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் (71), இவரது மனைவி முனியம்மாள் (65). தம்பதி இருவரும் தனிமையில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 13ம் தேதியன்று உறவினர் வீட்டிற்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்தனர். இந்நிலையில் மானாம்பதியில் உள்ள இவர்களது வீடு திறந்திருப்பதாக அருகில் வசிப்பவர்கள் குப்பனுக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் குப்பன் விரைந்து வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமார் 4 சவரன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம் திருடு போனது தெரிய வந்தது. இதையடுத்து பெருநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பெருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.