Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது: 4 கிலோ பறிமுதல்

கும்மிடிப்பூண்டி, ஆக.21: ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் 4 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில வாலிபரை கவரப்பேட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் கவரப்பேட்டை காவல் நிலைய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமாக வந்த வடமாநில வாலிபரிடம் விசாரித்தனர். அப்போது, அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் சோதனை செய்தபோது 4 கிலோ 200 கிராம் கஞ்சா சிக்கியது.

இதையடுத்து, போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த நர்கீஸ்(19) என்பதும் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து நர்கீஸை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.