Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பொன்னேரி அருகே சோகம் நிலக்கரி எடுக்கும் இயந்திரம் உடைந்து ஊழியர் பலி

பொன்னேரி, ஆக.20: மீஞ்சூர் அடுத்த எண்ணூர் கோல் நிறுவனத்தில் பணியின்போது, நிலக்கரி எடுக்கும் இயந்திரம் உடைந்து விழுந்ததில் ஊழியர் பரிதாபமாக பலியாகினர். அதனால், இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தேவகோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியராஜன்(35). மீஞ்சூர் பகுதியில் கடந்த 10 வருடங்களாக வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு எண்ணூர் கோல் நிறுவனத்தில் மின்சாரம் பழுதுகாக்கும் பணியில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்று நேற்று அதிகாலை பணியில் இருந்த போது நிலக்கரிகளை எடுத்து கொட்டும் இயந்திரம் உடைந்து பாண்டியராஜன் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.  இதனை தொடர்ந்து மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.